Thursday, July 23, 2009

அப்பா அம்மாவின் கனவு .....

நமது அப்பா அம்மாவின் கனவு என்ன என்று நாம் எப்போதாவது யோசித்தது உண்டா?... அதுதான் இங்கே எழுத்துகளாக....

எல்லா பெற்றோரும் தம்முடைய பிள்ளைகள் தாம் பட்ட கஷ்டமில்லாமல் முதலில் நல்ல குழந்தைகளாக, ஒரு நல்ல மாணவனாக, பிறகு எல்லோராலும் பெருமையாக பேசப்படும் ஒரு நல்லவனாக ஆகவேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருக்கும்(அது ஒரு டாக்டர், engineer, Business Man, Teacher, விளையாட்டு வீரனாக..... இன்னும் எத்தனயோ கனவுகள்). அதற்காக அவர்கள் பட்ட கஷ்டம் என்னவென்று என்றாவது நம் நினைத்து பார்த்து உண்டா ....

முதலில் குழந்தை பருவம்....

ஓவ்வொரு நாளும் நாம பன்னின குறும்புகளையும் அடாவடிதனதையும் ரசிச்சுக்கிட்டு நமளோட சிரிப்பில் உலகையே மறந்துகிட்டு இருபாங்க.. நாம பிறக்கும் போது தடுப்புசி அப்படிகிற பெயருலே ஒரு பெரிய லிஸ்ட்ல கொடுப்பங்க .....அதை ஓவ்வொரு தடவையும் மறக்காம கால்களுக்கு நல்ல செருப்பு வாங்காமல்... நல்ல துணி நமக்கு வாங்கிட்டு அவுங்க அழுக்கு துணி உடுத்திக்கிட்டு ....நம்ம மேல காத்து வெயில் படமா இருக்க ஒரு துண்ட போர்த்திகிட்டு ... கவ்வெர்மெண்டு ஆஸ்பத்திரில போட்டா எதாவது குழந்தைக்கு ஆய்டும் பயந்துகிட்டு .... தனியார் ஆஸ்பத்திரில கேக்கிறே அநியாய காச கொடுத்தாலும் மனதில் குழந்தைக்கு நல்ல ஊசி போட்டோம் திருப்தியோட சந்தோசமா நம்மல கூட்டிகிட்டுவருவங்க..

நடக்க பேசிபலக ஆரபிச்சபிறகு ..

அம்மா எனக்கு அது விளையாட வேணும்... அப்பா எனக்கு இது விளையாட வேணும் ... ஆரம்பிச்சு எல்லை இல்லாமல் கேட்போம்., அவங்க குழந்தையா இருக்கும் போது கேட்டு கிடைக்காதப்ப எப்படி வருத்தபட்டாங்கலோ அதை நம்ம குழந்தைகளும் FEEL செய்ய கூடாதுன்னு அவங்க நால முடிந்த அளவு நமக்கு வாங்கிதந்திருபாங்க....... இருந்தாலும் நாம அவங்க கிட்ட கேட்டு அடம் பிடிப்போம். நம்மளோட சின்ன ஆசைகளைகூட அவிங்க நிறைய கஷ்டப்பட்டு நிறைவேற்றிருப்பங்க.

பள்ளிக்கூடம் போனதும் நாம சொல்கிற பாடத்தை பார்த்து பூரிப்படையறதும் என் பொண்ணு / பையன் இந்த rhyms சொல்வா(ன்) அந்த rhyms சொல்வா(ன்) பெருமைபடறதும் அவங்கதான்.

இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் நம்மளோட அண்ணனுக்கோ அக்காவிற்க்கோ வாங்கி தந்ததை நாம கேட்கிறப்போ நம் பெற்றோரிடமிருந்து நீயும் பெரியவனாகு உனக்கும் வாங்கி தருகிறோம் என்ற பதில் வரும்முனே அதுவரைக்கும் நீங்க உயிரோடு இருபிங்களோ என்னவோன்னு வார்த்தைகளால் அவர்களை கொள்வோம்.

இப்படிஎல்லாம் வளர்த்தி பெற்றோர் படி படி சொன்னப்ப சிலர் படிதும் சிலர்படிக்காமலும் சிலர் பெற்றோர் விருப்படி வேலைக்கு போயும் சிலர் தம் விருப்படி வேலைக்கு போயும் இன்னும் சிலர் கிடைத்த வேலைக்கு போயும் மனிதனாக மாறிவிடுகிறோம்.

ஆனால் காலபோக்கில் நாம் வளர்த்தவர்களை மறந்து விடுகிறோம் எதாவது நமக்கு வேண்டும் எனற நேரங்களில் மட்டுமே பேசுகிறோம். அப்போதும் நம்ம குழந்தை கஷ்டப்படுகிரனே எதாவது செய்ய வேணுன்னு FEEL பண்ணுவங்க.

நம்முடைய நேரங்களில் பலவற்றை வேலைகளுக்காகவும், மற்றவைகளை நண்பர்களுக்காகவும் செலவு செய்து விடுகிறோம். என்றாவது ஒரு நாள் நம் பெற்றோருடன் பேசி மகிழதிருக்கிறோமா? இதனை நாள் நமக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த நம்முடைய அப்பா அம்மாவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டதுண்டா அப்படி கேட்டாலும் வயதான காலத்தில் எனக்கு என்னடா தேவை இருக்கு? பார் உனக்கு நல்லதா அது இல்லை...! அப்படின்னு கடைசிலே நமக்கும்., நம்மள சுத்தி இருக்கிறவங்களுகும் ஆசைய நிறைவேற்றுவதே அவர்களுடைய எண்ணமா இருக்கும்.

இன்றைய அவசர உலகில் எத்தனை பேருக்கு நம்மளோட அப்பாவோட அப்பா அம்மா பெயரும் அம்மாவோட அப்பா அம்மா பெயரும் தெரியும்? நம்முடைய பழைய நினைவுகளை நாம் அசை போடுவதேயில்லை அதுதான் காரணம்....நம்மளோட அம்மா அப்பாவை சந்தோசபடுத்தனும் அப்படினா அவங்களோட நேரத்தை பகிந்துகொள்ளணும் அது நம்மளோட வாழ்க்கைலே நிறைய அனுபவ பாடத்தை சொல்லி தரும்.

அதுமட்டுமில்லாமல் நம்மளோட அப்பா அம்மாகிட்ட நாம எப்படி வளர்ந்தோம் ... என்ன என்ன குறும்பு பண்ணினோம் ... அவுங்க என்ன கஷ்டப்பட்டு வளர்தினங்கோ .... அவுங்க அப்பா அம்மாகிட்ட எப்படி வளர்ந்தாங்க அப்படிகிறத கேட்டு பழைய நினைவுகளுக்கு அவர்களை அழைத்துபோனால் அவர்கள் மனதில் புதைத்து போன நினைவுகள் எல்லாம் பசுமையாக வெளியே வரும். அவர்களுடைய மனதும் லேசாகும் மிகுந்த சந்தோசமடைவர்கள்.

வயதான காலத்தில் தினசரி நம் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதே அவர்களை சந்தோசமடைய வைக்கும் என்பதே என் எண்ணம்.
முயற்சிசெய்யுங்கள் உண்மை என்றால் இதில் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.